‘மாமன்னன்’ படத்தை பார்த்து பாராட்டிய ஃபெப்சி மற்றும் இயக்குனர் சங்கம்... நன்றி தெரிவித்த இயக்குனர் மாரி செல்வராஜ் !

maamannan

‘மாமன்னன்’ படத்தை பார்த்து பாராட்டிய ஃபெப்சி மற்றும் இயக்குனர் சங்கத்திற்கு நன்றி என இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் கடந்த ஜூன் 29-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’. இந்த படத்தில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமூக நீதி குறித்து பேசிய இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. 

 maamannan

இந்த படத்தின் சிறப்பு காட்சி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம் ஆகிய இரு சங்களுக்கும் நேற்று திரையிடப்பட்டது. இந்த படத்தை ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், லிங்குசாமி, எழில் உள்ளிட்டோர் படத்தை பார்த்தனர். 

maamannan

இந்த படத்தை பார்த்த பின் பேசிய இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, மாமன்னன் ஒரு மாபெரும் வெற்றிப்படம. ஒரு சிறந்த படத்தை உருவாக்கிய இயக்குனர் மாரி செல்வராஜூக்கு வாழ்த்துக்கள். நடிகர் வடிவேலுவை இப்படியொரு கதாபாத்திரத்தில் நாம் யாரும் பாத்திருக்க மாட்டோம். மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். அதேபோன்று உதயநிதியும் நன்றாக நடித்துள்ளார். தன் வலியை ஒரு புல்லாங்குழலின் இசையை போல மென்மையாக மற்றவர்கள் உணர்த்தியிருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். இந்த படம் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது என்று கூறியிருந்தார். 

maamannan

இந்நிலையில் படத்தை பார்த்து பாராட்டிய ஃபெப்சி மற்றும் இயக்குனர் சங்கத்திற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாமன்னன் திரைப்படத்தை பார்த்து நேரில் அழைத்து பெரும் மகிழ்ச்சியோடு பாராட்டிய தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் (FEFSI) தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்திற்கும் (TANTIS) என் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என்றார். 


 

 

Share this story