டென் ஹவர்ஸ் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை வெளியிட்ட இயக்குனர் மாரி செல்வராஜ்...!

சிபி சத்யராஜ் நடித்துள்ள டென் ஹவர்ஸ் படத்தின் 2 வது ஸ்னீக் பீக் காட்சியை இயக்குனர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார்.
அறிமுக இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்துள்ள திரைப்படம் டென் ஹவர்ஸ். படத்தின் இசையை கே எஸ் சுந்தரமூர்த்தி மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவு -ஜெய் கார்த்திக் செய்துள்ளார். டுவின் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது. இப்படம் ஒரு பஸ்ஸில் நடந்த கொலை சம்பவத்தை மையப்படுத்தி ஓர் இரவில் அதை கண்டுபிடிக்கும் கதாநாயகன் என கதை உருவாகி உள்ளது.
An unpredictable ride packed with banger twists and turns that keeps you thoroughly entertained 🙌
— Mari Selvaraj (@mari_selvaraj) April 16, 2025
▶️ https://t.co/TDT00GE8hq
Wishing the team a great success.#TenHours releasing in cinemas this April 18th.@Sibi_Sathyaraj @5starsenthilk @DuvinStudios @thinkvault_… pic.twitter.com/ZFxfLm1Y7m
திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் முதல் ஸ்னீக் பீக் காட்சி அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் இரண்டாம் ஸ்னீக் பீக் காட்சியை இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார்.