“உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும்” - பகத் பாசிலை புகழ்ந்த இயக்குனர் மாரி செல்வராஜ் !

fahadhfaasil

நடிகர் பகத் பாசில்  பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக இயக்குனர் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’. இந்த படத்தில் உதயநிதியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதோடு ரத்னவேலு என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் பகத் பாசில் நடித்திருந்தார். சாதி பெருமை பேசும் இந்த கதாபாத்திரத்தை சமீபத்தில் சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். 

fahadhfaasil

இந்நிலையில் பிரபல நடிகராக இருக்கும் பகத் பாசில், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி இயக்குனர் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன்.

fahadhfaasil

மிகச்சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன். ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர்.அம்பேத்கரின் குரலை ஒங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 


 

Share this story