‘உதயநிதிக்காக தனுஷ் இதை செய்தார்’- மனம் திறந்த மாரிசெல்வராஜ்.

photo

உதயநிதி ஸ்டாலின் அரசியலில் ஆர்வம் காட்ட துவங்கியதால் சினிமாவில் இருந்து விலகினார். எனினும் அவரது கடைசி திரைப்படமான ‘மாமன்னன்’ ரிலீசுக்கு தயாராகிவருகிறது. மிகப்பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் இயக்குநரான மாரிசெல்வராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘மாமன்னன்’ படம் இப்போது  உருவாக காரணமே நடிகர்களான தனுஷ் மற்றும் துருவ் விக்ரம் தான் என்ற சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.

photo

அதாவது,  உதயநிதியின் கடைசி திரைப்படம் நான் இயக்க வேண்டும் என அவர் விரும்பினார். ஆனால் அந்த சமயத்தில் நான் தனுஷ் மற்றும் துருவ் விக்ரம் நடிக்க இருக்கும் படங்களின் ப்ரீ புரோடக்ஷன் பணிகளில் பிசியாக இருந்தேன். உதய் விரும்பி கேட்டு கொண்டதால் இது குறித்து தனுஷ் மற்றும் துருவிடம் கேட்டேன். அவர்களும் உதயநிதிக்காக தாராள மனதுடன் ஒப்புக்கொண்டனர். என சுவாரஸ்ய தவலை பகிந்துள்ளார்.

photo

அடுத்த மாதம் வெளியாகவுள்ள ‘மாமன்னன்’ படத்தின் வேலைகள் படு சுறுசுறுப்பாக நடந்து வரும் வேலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை உச்சகட்ட எதிர்பார்ப்பில் ஆழ்த்தி வருகிறது.

 

Share this story