"படம் ஓடவில்லையென்றால் என்னை கேள்வி கேட்கலாம்" -எந்த இயக்குனர் இப்படி பேசினார் தெரியுமா ?

prabas

பான் இந்தியா ஸ்டார்களில் ஒருவரான பிரபாஸ், அடுத்து ’தி ராஜா சாப்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஹாரர் மற்றும் காமெடி கலந்த இப்படத்தை மாருதி இயக்கியுள்ளார். பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிக்க, ஹீரோயின்களாக மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் சஞ்சய் தத், போமன் இரானி, ஜரீனா வஹாப், சமுத்திரக்கனி நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ளார். தமிழில் வரும் ஜனவரி 10ம் தேதி திரைக்கு வரும் இப்படம், மற்ற மொழிகளில் 9ம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் மாருதி, ‘நான் இயக்கியுள்ள `தி ராஜா சாப்’ படம், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளில் ஒரு சதவீதம் பூர்த்தி செய்ய தவறினாலும், என்னை தாராளமாக கேள்வி கேட்கலாம். இதோ, எனது வீட்டு முகவரியை உங்களுக்கு தருகிறேன். ரசிகர்கள் நேராக அங்கு வந்து என்னை கேள்வி கேட்கலாம்’ என்று சவால் விட்டார்..

Share this story