ஏதாவது கிளப்பி விடாதீங்க... அடுத்த படம் குறித்த அப்டேட் கொடுத்த மோகன் ஜி !

mohan g

 தனது அடுத்த படம் குறித்து இயக்குனர் மோகன் ஜி புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். 

தமிழ் சினிமாவில் கவனம் ஈர்க்கும் இயக்குனராக மாறியுள்ளார் மோகன் ஜி. ‘பழைய வண்ணாரப்பேட்டை’ இயக்குனராக அறிமுகமான அவர், ‘திரௌபதி’ படத்தின் மூலம் பெரிய பிரபலமானார். இந்த படத்தில் நாடக காதல் குறித்து பேசி அனைவரின் பாராட்டையும் பெற்றார். 

mohan g

இந்த படத்தை அடுத்து ருத்ரதாண்டவம் படத்தை இயக்கினார். தற்போது செல்வராகவனை கதாநாயகனாக வைத்து ‘பகாசூரன்’ படத்தை இயக்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

mohan g

சமூகத்தில் அடுத்தடுத்து தாக்கத்தை ஏற்படுத்தும் கதைக்களத்தை தேர்ந்தெடுத்து படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளது. 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ரிச்சர்ட் ஷிஷி புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டுள்ள அவர், சில ''சில மீடியாக்களுக்கு.. இவரு யாருன்னு தெரியுதா.. காசி கங்கா ஆர்த்தியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.. எல்லா கடவுள்களையும் வணங்குபவர் ரிச்சர்டு ரிஷி சார்.. நீங்களா ஏதாவது கிளப்பி விடாதீங்க.. அப்பறம் முக்கியமான செய்தி.. என்னோட அடுத்த படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் சார் தான். அறிவிப்பு விரைவில்...என்று குறிப்பிட்டுள்ளார்.
 

Share this story