‘அந்த படத்தை பார்க்காதவங்க வெட்கி தலைகுனிய வேணும்’ - மிஷ்கின் ஆதங்கம் !

myskin

‘கடைசி விவசாயி‘ படத்தை பார்க்காதவங்க வெட்கி தலைகுனிய வேண்டும் என இயக்குனர் மிஷ்கின் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

ஓம் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வெள்ளமலை’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய, எளிமையிலிருந்து நாம் கொஞ்சம் கொஞ்சமாக தள்ளிப்போய் கொண்டிருக்கிறோம். எளிமையான மனிதர்களை பார்ப்பதே அரிதாகிவிட்டது. சமீபத்தில் வெளியான ‘கடைசி விவசாயி’ படத்தை நாம் யாருமே பார்க்கவில்லை. 

myskin

அந்த படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அந்த படத்தை பார்க்காத நாம் வெட்கி தலைகுனிய வேண்டும். உலகத்திலேயே சிறந்த படம் அந்த படம் தான் என்று கூறுகின்றனர். அந்த படத்தை வெற்றிப்படமாக்க நாம் தவறிவிட்டோம். 

myskin

ஒரு நல்ல படைப்பாளி நாம் எப்படி வாழவேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருக்கிறான். அவன் தன் உதிரத்திலிருந்து அந்த படைப்பை உருவாக்குகிறான். அவர் நினைத்திருந்தால் பெரிய நடிகருக்கு கதை சொல்லி கோடிகளில் சம்பாதிக்க முடியும். ஆனால் அந்த இயக்குனர் அப்படிப்பட்டவர் இல்லை. சினிமாவை நேசிக்கும் சிறந்த படைப்பாளி என்று கூறினார். 

 

 

Share this story