விஷால் ரொம்ப ஸ்வீட்... அந்தர் பல்டி அடித்த மிஷ்கின்.. !

myskin

விஷால் குறித்து பேசியது கோபத்தில் என்று இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். 

‘துப்பறிவாளன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் போது விஷால் மற்றும் இயக்குனர் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் படத்தை இயக்கப்போவதில்லை என்று மிஷ்கின் விலகினார். ஆனால் நானே அந்த படத்தை இயக்கப்போவதாக விஷால் அறிவித்தார். 

அதன்பிறகு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் மிஷ்கின், விஷால் ஒரு பொறுக்கி. அவருடன் பணிபுரிவது மிகவும் கடினமான ஒன்று என்று சகட்டுமேனிக்கு திட்டி தீர்த்தார். என்னதான் பிரச்சனை இருந்தாலும் பொதுவெளியில் மிஷ்கின் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. 

myskin

இந்நிலையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடியே’ டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்டு பேசிய மிஷ்கின், திரும்ப திரும்ப நான் பொறுக்கி என சொன்னதை சொல்லி கொண்டிருக்கிறீர்கள். நான் செய்த துரோகத்தை மறக்கமாட்டேன் என்று விஷால் சொல்லி கொண்டிருக்கிறார். அப்படி என்ன துரோகம் செய்துவிட்டேன். என் இதயத்திற்கு நெருக்கமானவர் விஷால். 

சண்டை போடாமல் எப்படி வாழ முடியும். நல்ல நட்பு அது. இருவரும் நட்பாக பழகி வந்தோம். நான் அவரை மிஸ் செய்கிறேன். ஆனால் அவர் என்னை மிஸ் செய்யமாட்டார். அவருக்கு ஈகோ அதிகம். எனக்கும் ஈகோ இருக்கிறது. ஆனால் அதை பொறுத்துக் கொள்வேன். பொறுக்கி என்று சொன்னது ஒரு கோபத்தில் சொன்ன வார்த்தை. ஆனால் விஷால் அப்படிப்பட்டவர் இல்லை. என்னுடன் அவர் பணியாற்றவில்லை என்றாலும் அவரது திரைப்படங்கள் வெற்றிப்பெற வாழ்த்துக்கள். இனி விஷாலுடன் படம் பண்ணவே மாட்டேன். எந்த நேரத்திலும் கெஞ்சிக் கொண்டிருக்க மாட்டேன். அவருடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருக்கிறது என்று கூறினார். 

 

Share this story