- 12 டிகிரி குளிர்...தம்பி விஜய்யுடன் பணியாற்றியது - இயக்குனர் மிஷ்கின் நெகிழ்ச்சி !

leo

‘லியோ’ படத்தில் விஜய்யுடன் பணியாற்றியது குறித்து இயக்குனர் மிஷ்கின் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

leo

இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் மிஸ்கின் தனது பகுதி படப்பிடிப்பை நேற்று நிறைவு செய்துள்ளார்.  இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், இன்று காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன். - 12 டிகிரியில் 500 பேர் கொண்ட படக்குழுவினர் கடுமையான உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது. 

leo

ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவு மிகச் சிறப்பான சண்டை காட்சி ஒன்றை படமாக்கினார். உதவி இயக்குனர்களின் ஓயாத உழைப்பும் என் மீது செலுத்திய அன்பும் ஆச்சரியப்பட வைத்தது. படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு தொழிலாளியை போல் உழைத்துக் கொண்டிருக்கிறார். 

என் லோகேஷ், ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குனராக அன்பாகவும் கண்டிப்பாகவும் ஒத்த சிந்தனையுடன் ஒரு போர் வீரனை போல் செயல்பட்டு வருகிறார். என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினான். நான் அவன் நெற்றியில் முத்தமிட்டேன். 

என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

 

Share this story