“ சினிமாவை விட்டு விரைவில் விலகுவேன்” - இயக்குநர் மிஷ்கின் அதிரடி

myskin

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘டிராகன்’ படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். பிப்ரவரி 21-ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.mysskin

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (பிப்.13) சென்னையில் நடைபெற்றது. இதில் மிஷ்கின் படக்குழுவினர் குறித்து பேசிய பிறகு ‘பேட் கேர்ள்’ பட சர்ச்சை குறித்து பேசினார். அவர் பேசியதாவது: “பேட் கேர்ள்’ படம் எடுத்தது ஒரு பெண். ட்ரெய்லரை வைத்து ஒரு படத்தை முடக்குவதில் நியாயமே இல்லை. அதிலும் ஒரு பெண் எடுத்த ஒரு படத்தை வெளிவர விடாமல் தடுக்கிறார்கள். ஒரு பெண் கலங்குவது என் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது. சினிமாவில் இருப்பவர்கள் எல்லாரும் சேர்ந்து அரசியல்வாதிகளிடம் பேசி சென்சாரில் கட் செய்ய வேண்டியவற்றை கட் செய்து அந்த படத்தை எப்படியாவது கொண்டு வர வேண்டும். ஒரு பெண் இயக்குநர் ஆவது மிகவும் முக்கியமான ஒன்று” இவ்வாறு மிஷ்கின் பேசினார்.

பின்னர் தொகுப்பாளர்கள் மேடையில் இருந்த திரையில் படக்குழுவினர் ஒவ்வொருவரின் புகைப்படங்களாக காட்டி இயக்குநர் மிஷ்கினிடம், அவர்கள் குறித்து ஒரு வரியில் கருத்து கேட்டனர். அதில் மிஷ்கினின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. அது குறித்து கருத்து தெரிவித்த அவர், “விரைவில் சினிமாவை விட்டு விலகப் போகும் ஒருவன்” என்று ஒருவரியில் பதில் கூறிவிட்டு சென்றார். 

Share this story