விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் இயக்குனர் மிஷ்கின்
விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடித்து வருகிறார் மிஷ்கின். அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘ட்ரெயின்’. தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தாண்டிற்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தில் அவருக்கு வில்லனாக மிஷ்கின் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. பாண்டிராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. நித்யா மேனன் நாயகியாக நடித்து வருகிறார்.
பாண்டிராஜ் - விஜய் சேதுபதி கூட்டணி நீண்ட மாதங்களாக பேச்சுவார்த்தையில் இருந்தது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க ஒப்புக் கொண்டவுடன் சத்தமின்றி படப்பிடிப்புக்கு கிளம்பிவிட்டார்கள். ஒரே கட்டமாக பிரதான காட்சிகள் அனைத்தையும் படமாக்கியவுடன், அதிகாரபூர்வமாக அறிவிக்கலாம் என படக்குழு முடிவு செய்திருக்கிறது.