வசமாக வாங்கி கட்டிய சதீஷ்…… எதுக்கு..…..இதெல்லாம் நமக்கு தேவையா………..

photo

காமெடிக்கு பேசுவதாக நினைத்து,வம்பை விலைக்கொடுத்து வாங்கியிருக்கிறார் நடிகர் சதீஷ். பெண்ணின் உடை குறித்து பேசிய நடிகர் சதீஷிற்கு மூடர்கூடம் படத்தின் நடிகரும் இயக்குநருமான நவீன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

photo
சமீபத்தில், சன்னிலியோன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தது. இந்த விழாவில் சன்னிலியோன், ஜி பி முத்து, தர்ஷாகுப்தா, சதீஷ் உட்பட படக்குழுவினர் கலந்துக்கொண்டு படத்தின் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டனர். அந்த வகையில் படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காமெடி நடிகர் சதீஷ் எல்லை மீறி பேசியிருப்பதாக நெட்டிசன்கள் விளாசி வந்த நிலையில், தர்ஷா குப்தாவின் ஆடை குறித்து அவர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

photo

கமெடி நடிகர் சதீஷ், சன்னிலியோனை உயர்த்தி பேசுவதாக நினைத்து தற்பொழுது சிக்கலில் சிக்கியுள்ளார், அதாவது  "பாலிவுட்டிலிருந்து  வந்த சன்னி லியோன் எப்படி சேலை கட்டி நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். நம்ம கோவை பொண்ணு தர்ஷா குப்தா எப்படி கவர்ச்சியாக உடை அணிந்து வந்திருக்கிறார் பாருங்க" என சதீஷ் பேசினார். அதற்கு மூடர்கூடர் பட இயக்குநர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

photo

அதாவது "சன்னிலியோன் திரையில் ஆடையின்றி தோன்றுவதும், கோயமுத்தூர் பெண் மேடையில் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதும் அந்த பெண்களின் தனிப்பட்ட உரிமை. சகோ, உங்கள் மனைவி என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்தாலே அது தவறுதான். #மாற்றமேகலாச்சாரம்" என ட்வீட் போட்டு சதீஷின் பேச்சிற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். இதனை பல இணையவாசிகளும் வரவேற்று வருகின்றனர். 

Share this story