ஜெயிலர் 2 ஸ்கிரிப்ட் ரெடி... விரைவில் அப்டேட் - நெல்சன்

nelson
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் 'ஜெயிலர்'. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ரூ.600 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 ஆம் பாகத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டனர். இதுக்குறித்து நெல்சன் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் ஜெயிலர் 2 - க்கான ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டது. இன்னும் சில மாதங்களில் அதற்கான அதிகார்ப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமே அதை வெளியிடுவார்கள் எனக் கூறியுள்ளார். சென்ற முறை ஜெயிலர் திரைப்பட வெற்றிக்கு சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் நெல்சனுக்கு ஒரு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கினார். அதேப்போல் இந்த முறை படம் வெற்றிக்கு என்ன வேண்டும் என சில கார்கள் மற்றும் பிரைவேட் ஜெட்டுகளின் புகைப்படங்கள் நிகழ்சசியின் தொகுப்பாளர்கள் காட்டியபோது . நெல்சன் `ஜெட் தான் எனக்கு வேண்டும் . இலவசமாக கொடுக்கப்போறாங்க பெருசா வாங்கிட்டு அதை செகண்ட் ஹாண்ட் ல வித்துடுவேன்' என நகைச்சுவையாக கூறியுள்ளார்.

Share this story