அந்த ஆக்‌ஷன் ஹீரோவையும் நடிக்க வைக்க நினைத்தேன் - ‘ஜெயிலர்’ குறித்து மனம் திறந்த நெல்சன் !

jailer

 தெலுங்கு நடிகர் ஒருவரை ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்க வைக்க இருந்தேன் என்று இயக்குனர் நெல்சன் தெரிவித்துள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆன நிலையில் நல்ல வசூலை குவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட முதல் நாளிலேயே 100 கோடி வசூலை நெருங்கிவிட்ட நிலையில் விரைவில் புதிய உச்சம் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

jailer

இந்நிலையில் பிரபல இணையத்தள ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் ஒன்றை இயக்குனர் நெல்சன் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்க வைக்க இருந்தேன். ஏதாவது ஒரு இடத்தில் நடிக்க வைக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் என்னால் அதை சரியாக செய்ய முடியவில்லை. இது குறித்து நடிகர் பாலகிருஷ்ணாவிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று கூறினார். 

jailer

மேலும் பேசிய அவர், பாலகிருஷ்ணாவை போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அவரை இந்த படத்தில் கொண்டு வரமுடியவில்லை. அவரை கொண்டு வந்தால் அது பவர்புல்லான கதாபாத்திரமாக இருக்கவேண்டும். ஜெயிலர் படத்தில் பெரிய நட்சத்திரங்களை நடிக்க வைக்கவேண்டும் என்று யோசித்து வைத்திருந்தேன். பின்னாளில் நடிகர் பாலகிருஷ்ணாவை நிச்சயம் எனது படத்தில் நடிக்க வைப்பேன் என்று கூறினார். 



 

Share this story