சிவகார்த்திகேயனின் 'SK 27' படத்தின் இயக்குனர் யார் தெரியுமா ?

sivakarthikeyan

தமிழ் திரையுலகில் தற்போது பிஸியான நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனின் அடுத்த புதிய படம் குறித்த ஹைப் தற்போதே உச்சத்தை தொட்டுள்ளது. தன் யதார்த்தமான படைப்புகளால் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது 'SK 27' படத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர் மற்றும் இந்துஜா நடிப்பில் கடந்த 2023-ல் வெளியான படம் 'பார்க்கிங்'. திரையரங்குகளில் மட்டுமின்றி, ஓடிடி தளங்களிலும் வெளியாகி விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

Share this story