‘குடும்பஸ்தன்’ படக்குழுவை நேரில் சந்தித்து பாராட்டிய இயக்குனர் பா. ரஞ்சித்!

kudumbasthan

‘குடும்பஸ்தன்’ படக்குழுவை இயக்குனர் பா. ரஞ்சித்  நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். 

தமிழ் சினிமாவில் ஜெய் பீம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மணிகண்டன். இவருடைய எதார்த்தமான நடிப்பு ஏராளமான ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மணிகண்டனுக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத் தந்துள்ளது. ஜெய் பீம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களை ஹீரோவாக நடித்து வருகிறார் மணிகண்டன். அந்த வகையில் இவர் கதாநாயகனாக நடித்த குட் நைட், லவ்வர் ஆகிய படங்கள் வெற்றி படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து இவர் குடும்பஸ்தன் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.


இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்க சினிமாக்காரன் நிறுவனம் தயாரித்திருந்தது. வைஷாக் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியிருந்த இந்த படம் கடந்த ஜனவரி 24ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை வெற்றிப் பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. 

Share this story