சனாதனம் குறித்த 'உதயநிதி'யின் கருத்தை ஆதரிக்கிறேன் - இயக்குநர் 'பா. ரஞ்சித்'.

சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என சனாதன மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலினின் கருத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது, குறிப்பாக எதிர்கட்சிகள் இணைந்துள்ள ‘இந்தியா’ கூட்டணியில் சலசலப்பு நிலவியது. இந்த நிலையில் உதயநிதியின் கருத்திற்கு இயக்குநர் பா. ரஞ்சித் ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.
#சனாதானஒழிப்புமாநாடு சனாதான கொள்கையை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென்று #அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின்@Udhaystalin பேசியதை வரவேற்கின்றோம்!காலங்காலமாக இச்சமூகத்தில் சனாதான கொள்கையான சாதிய படிநிலை ஒடுக்கமுறையை ஒழித்து #சமூக_சமத்துவத்தை நிலைநிறுத்த போராடியவர்களின் வரலாறு உள்ளது.(1/
— நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture) September 5, 2023
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் “சனாதானஒழிப்புமாநாடு சனாதான கொள்கையை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென்று அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின்பேசியதை வரவேற்கின்றோம்!காலங்காலமாக இச்சமூகத்தில் சனாதான கொள்கையான சாதிய படிநிலை ஒடுக்கமுறையை ஒழித்து சமூக_சமத்துவத்தை நிலைநிறுத்த போராடியவர்களின் வரலாறு உள்ளது. புத்தர், பண்டிதர்அயோத்திதாசர்,பாபாசாகேப்அம்பேத்கர் தாத்தாரெட்டமலைசீனிவாசன், தந்தைபெரியார் போன்ற தலைவர்கள் சாட்சியமாக உள்ளார்கள். இந்தியாவில் மூட நம்பிக்கை வெறி அடங்கி,சமத்துவ சமதர்ம ஆட்சிமுறை அமைய, பகுத்தறிவு மலர,உண்மை. மதச்சார்பின்மை ஓங்கபாபாசாகேப்அம்பேத்கரின் பெளத்தம் தத்துவம் உள்ளது,பெளத்தமே சனாதானத்தை ஒழிக்கும்.சனாதான கொள்கையை ஒழித்து சமூகஜனநாயகத்தை உருவாக்குவோம்! நீலம்பண்பாட்டுமையம் அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலினுக்குத் துணை நிற்கிறது!” என பதிவிட்டுள்ளார்.