இயக்குநர் பா.இரஞ்சித் நடத்தும் பி.கே.ரோஸி திரைப்பட விழா தொடக்கம்..!

இயக்குநர் பா.இரஞ்சித் நடத்தும் பி.கே.ரோஸி திரைப்பட விழா இன்று முதல் தொடங்கியது.
நீலம் பண்பாட்டு மையம் சார்பாக இயக்குநர் பா.இரஞ்சித் ஒவ்வொரு ஆண்டும் கலை நிகழ்ச்சிகளையும் திரைப்பட விழாவையும் நடத்தி வருகிறார். பி.கே.ரோஸி திரைப்பட விழா இன்று (ஏப்.2) காலை 9 மணிக்கு சென்னையில் சாலிகிராமத்திலுள்ள பிரசாத் லேப்பில் தொடங்கியது. ஏப்.2 முதல் ஏப். 6ஆம் தேதி வரை இந்தத் திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில் பல்வேறு மொழிப் படங்கள் திரையிடப்பட உள்ளன.
The P. K. Rosy film festival is here 🎬! The film line-up is strong. Join us at the Vaanam Art Festival 2025, organised by Neelam Cultural Centre 🎉.
— pa.ranjith (@beemji) April 2, 2025
We invite you all to join us🎊!
Entry free! First come first serve basis!
Mandatory registration for participation:… pic.twitter.com/anVCKfQhhZ
படங்கள் முடிந்ததும் அது குறித்த கேள்விகளுக்கு அந்தப் படத்தின் இயக்குநர், நடிகர், நடிகைகளுடன் கலந்துரையாடல் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் காதல் தி கோர் இயக்குநர் ஜியோ பேபி, பிஎஸ் மித்ரன் உள்பட பலர் கலந்துகொண்டு உரையாற்றியதும் கவனிக்கத்தக்கது.
ஒவ்வொரு நாளும் 4 படங்கள் திரையிடப்படுகிறது. தமிழில் இருந்து விடுதலை, கொட்டுக்காளி, தங்கலான், வாழை ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன. பார்வையாளர்கள் இலவசமாக இந்தப் படங்களை காணலாம். இந்த எக்ஸ் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள கூகுள் ஃபார்மில் உங்கள் தகவல்களை பதிவிட்டு அனுமதி சீட்டுகளை பெறலாம்.