"நான் நினைத்த ஹீரோயின் இவர்" -இயக்குனர் பாண்டிராஜ் யாரை சொன்னார் தெரியுமா ?

nithya-menan-34
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் ‘தலைவன் தலைவி’ திரைப்படம் இம்மாதம் 25-ம் தேதி வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.விஜய் சேதுபதி, நித்யா மேனன், காளி வெங்கட், சரவணன், ரோஷினி என நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி ,நடிகை நித்யாமேனன் ,மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் கலந்து கொண்டு பேசினார்கள் 
இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில், ''நான் இதுவரை 11 படங்களை இயக்கி இருக்கிறேன். பத்து படங்களுக்கு நான் நினைத்த ஹீரோயின் கிடைத்ததில்லை. முதல் முறையாக நான் திரைக்கதையில் என்ன எழுதினேனோ..! நித்யா மேனன் தான் வேண்டுமென்று கேட்டேன். அவர் தான் இந்த படத்தில் நடித்திருக்கிறார். 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை' ஆகிய படங்களை பார்த்த பிறகு நிறைய அண்ணன்- தங்கைகளும் தங்களிடமிருந்த விரோதத்தை மறந்து ஒன்றிணைந்தாக என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல் இந்தப் படம் வெளியான பிறகு கணவன் மனைவி விவாகரத்து குறித்து ஏதேனும் முடிவு செய்திருந்தால்.. அதற்கு செல்ல வேண்டுமா? என யோசிப்பார்கள். அந்த யோசனையை இந்த படம் வழங்கும் என்று நான் நம்புகிறேன்,'' என்றார்.

Share this story