வெறித்தாமாக வொர்க் அவுட் செய்து சமந்தாவிற்கே டஃப் கொடுக்கும் 'பார்த்திபன்' – வெளியான வீடியோ.

photo

வித்தியாசமான படைப்புகளை மக்களுக்கு வழங்கி தனக்கென ஒரு ரசிகர்க் கூட்டத்தையே சேர்த்து வைத்திருப்பவர் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன். இவர் புதிய பாதை திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்குள் இயக்குநரகவும், நடிகராகவும் அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிபடங்களை கொடுத்துள்ளார். சினிமாவில் யாரும் செய்திடாத பல புதுமைகளை படங்களில் செய்து பலரது பாராட்டுகளையும் பெற்றார். உதாரணமாக இவர் இயக்கி, இவர்மட்டும் நடித்த ‘ஒத்த செருப்பு’ திரைப்படம், சிங்கிள் ஷாட் நான் லீனியர் படமாக வெளியான ‘இரவின் நிழல் படங்களை குறிப்பிடலாம்.

photo

பார்த்திபன் சின்ன  பழுவேட்டரையர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகள் தொடங்க உள்ள நிலையிலும், மேலும் அடுத்தடுத்து தான் கமிட்டாகியுள்ள படத்திற்காகவும் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்து வருகிறார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

photo

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சமந்தாவிற்கே டஃப் கொடுப்பார் போலயே என்பது மாதிரியான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.


 

Share this story