இயக்குனர் பி.எஸ்.மித்ரனுக்கு திருமணம்... நேரில் சென்று வாழ்த்திய கார்த்தி !

ps Mithran

இயக்குனர் பி.எஸ்.மித்ரன் திருமணம் நடைபெற்ற நிலையில் நேரில் சென்று நடிகர் கார்த்தி வாழ்த்தினார். 

ps Mithran

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் பி.எஸ்.மித்ரன். க்ரைம் த்ரில்லரில் இணையத்தள குற்றங்கள் சார்ந்து உருவாகும் திரைப்படங்களை இயக்கி வருகிறார். விஷாலின் சூப்பர் ஹிட் படமான 'இரும்புத்திரை' படத்தை இயக்கிய இயக்குனராக அறிமுகமானார்.  ஆக்ஷன் கிங் அர்ஜூன் வில்லனாக மிரட்டிய இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

ps Mithran

இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'ஹீரோ' படத்தை இயக்கினார். ஆனால் இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. பின்னர் கடந்த ஆண்டு கார்த்தியை வைத்து 'சர்தார்' படத்தை இயக்கினார். இந்த படம் நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது. இதையடுத்து அடுத்த படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 

ps Mithran

இந்நிலையில் இயக்குனர் பி.எஸ்.மித்ரனுக்கு எளிமையான முறையில் நேற்று திருமணம் நடைபெற்றது. தஞ்சாவூரில் உள்ள தனது குலதெய்வம் கோவிலில் எளிமையான முறையில் சினிமா விமர்சகர் ஆஷா மீரா ஐயப்பன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த படத்தில் நடிகர் கார்த்தி கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதுதவிர நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துக்கொண்டனர். 

Share this story