'எம்புரான்' படக்குழுவை பாராட்டிய இயக்குனர் ராஜமவுலி...!

mohanlal

பிரபல இயக்குனர் ராஜமவுலி, “எம்புரான்” திரைப்படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். 


நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது. லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்குவதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். 



 
இப்படம், வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி மலையாளம், தமிழ், இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடா என்று மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இதனை பார்த்த பிரபல இயக்குனர் ராஜமவுலி, படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில்,  ட்ரெய்லரின் முதல் ஷாட் முதலே என்னை கவர்ந்தது... மோகன்லால் சாரின் கமாண்டிங் பிரசன்ஸ் உண்மையிலேயே கவர்ந்து இழுக்கும் வகையில் இருந்தது. இது ஏற்கனவே ஒரு பிளாக்பஸ்டர் போல் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

Share this story