52 வது திருமண நாளில் மனைவிக்கு கார் பரிசளித்த இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர்...!

SA chandrasekar

52 வது திருமண நாள் கொண்டாடும் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர், மனைவி ஷோபனா சந்திரசேகரும் விலை உயர்ந்த காரை பரிசளித்துள்ளார். 

தமிழ் சினிமா இயக்குனரும், நடிகரும், நடிகர் விஜயின் தந்தையுமானவர் எஸ் ஏ சந்திரசேகர், இயக்குனராக பல சாதனைகளை படைத்தாலும் இப்போது நடிகராகவும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தயாரிப்பாளராக படங்களையும் தயாரித்திருக்கிறார். தற்போது அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு தேவையான அறிவுரைகளையும் சந்திரசேகர் வழங்கி வருகிறார்.


இந்த நிலையில் சந்திரசேகர் தன்னுடைய 52 வது திருமண நாளை கொண்டாடி வருகிறார். தனது திருமண நாளில் தனது மனைவியான ஷோபனாவுக்கு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Share this story