'கேப்டன்' மறைவுக்கு இரங்கல் தெரிவித்த இயக்குநர் 'எஸ்.ஏ.சி'- ஆடியோ வைரல்.
1703760700402
கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ சந்திரசேகர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
— S A Chandrasekhar (@Dir_SAC) December 28, 2023
அந்த பதிவில் “ எனது இனிய நண்பர் விஜயகாந்த் உயிரோடு இருக்கும் போது அவரை ஆரத்தழுவி முத்தமிடவேண்டும் என ஆசைப்பட்டேன். அதற்காக இரண்டு ஆண்டுகளாக முயற்சித்தேன் நடக்கவில்லை. ஆனால் அவரது உயிரற்ற உடலை பார்க்க கூடாது என்று கடவுள் நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை, அவரை பார்க்க முடியாத நிலையில் இருக்கிறேன். இந்நாளில் துபாயில் இருக்கிறேன். அவருக்காக கண்ணீர் சிந்துவதை தவிர வேறு வழி தெரியவில்லை” என பேசி ஆடியோ வெளியிட்டுள்ளார்.