விஷாலுக்கு ஆதரவாக பதிவிட்ட இயக்குநர் சீனு ராமசாமி

விஷாலுக்கு ஆதரவாக பதிவிட்ட இயக்குநர் சீனு ராமசாமி

அண்மையில் மார்க் ஆண்டனி தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் நடிகரும், நடிகர் சங்க பொதுசெயலாளருமான விஷால் பேசினார். அப்போது, “ 1 கோடியில் இருந்து 4 வரை கோடி வரை கையில் பணம் வைத்துக்கொண்டு சினிமாவிற்கு படம் தயாரிக்க வருகிறீர்கள் என்றால், தயவு செய்து இரண்டு வருடத்திற்கு சினிமாவிற்கு வராதீர்கள் என்றும், சல்லிக்காசு கூட திரும்ப வராது என்றும் அவர் கூறினார். ஏற்கனவே 120 திரைப்படங்கள் வெளியிட முடியாமல் காத்துக்கிடக்கின்றன எனவும் அவர் தெரிவித்தார். 

விஷாலுக்கு ஆதரவாக பதிவிட்ட இயக்குநர் சீனு ராமசாமி

விஷாலின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு போஸ் வெங்கட் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டனர். இந்த நிலையில் விஷாலுக்கு ஆதரவாக பிரபல இயக்குநர் சீனு ராமசானி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

null


அதில், நடிகர் விஷால் சொல்வதில் உண்மை உண்டு, சிறு படங்களுக்கு இங்கு நியாயம் இல்லை என்றும், சிறுபடங்களை வௌியிட யார் உண்டு எனவும் தெரிவித்துள்ளார். சின்ன பட்ஜெட் படங்களை வாழ விட மாட்டார்கள், இது படுகொலைக்கு சமம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

Share this story