‘ஹேப்பி பர்த்டே கிரேஸி டியர்’ - செல்வராகவனுக்கு வாழ்த்து சொன்ன ஐஸ்வர்யா.. கவனம் பெறும் ட்விட்டர் பதிவு !

aishwarya rajinikanth

இயக்குனர் செல்வராகவனுக்கு தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா பிறந்தநாள் வாழ்த்து கூறியது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. 

 தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். நடிகர் தனுஷின் கெரியரை மாற்றிய ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன என அடுத்தடுத்து சூப்பர் படங்களை கொடுத்து ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்துள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான சாணிக் காயிதம், பகாசூரன் ஆகிய நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. 

aishwarya rajinikanth

இயக்குனர் செல்வராகவன், தனது 46வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து தனது தம்பி புதியதாக கட்டியுள்ள வீட்டிற்கு தனது மனைவி கீதாஞ்சலியுடன் சென்ற செல்வராகவன், அங்கு குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடினார். 

aishwarya rajinikanth

இந்நிலையில் நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியும், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா, செல்வராகவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது கவனம் பெற்று வருகிறது. அதில், ஹேப்பி பர்த்டே மை கிரேஸி டியர், எப்போதும் அதீத அன்புடன் என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு செல்வராகவனை கட்டிப்பிடித்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.  

aishwarya rajinikanth

இதற்கிடையே தனுஷும், ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர். ஒன்றாக வாழ்ந்து வந்த இந்த தம்பதி கடந்த ஆண்டு பரஸ்பரமாக பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this story