அரசியல் த்ரில்லர் படத்தில் செல்வராகவன்... வில்லனாகும் பிரபல தெலுங்கு நடிகர் !

selvaraghavan

இயக்குனர் செல்வராகவன் நடிக்கும் அரசியல் த்ரில்லர் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் இருப்பவர் செல்வராகவன். சமீபகாலமாக முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதேநேரம்  ‌ சில ஹீரோவாகவும் நடித்துள்ளார். 

selvaraghavan

இந்நிலையில் அரசியல் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் புதிய படகம் ஒன்றில் நடிகர் செல்வராகவன் நடிக்கவுள்ளார்.‌ இந்த படத்தில் வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் சுனில் நடிக்கிறார். ஏற்கனவே அவர் தமிழில் 'ஜெயிலர்', 'கேப்டர் மில்லர்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  ‌ 

அதிரடி ஆக்ஷன் திரைக்களம் கொண்ட இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரங்கநாதன் இயக்கவுள்ளார். அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. 

Share this story