‘எனக்கு நண்பர்களே கிடையாது’ - ஆதங்கத்தில் இயக்குனர் செல்வராகவன் !

selvaraghavan
 தனது நண்பர்களே இல்லை என இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதங்கம் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் இயக்குனரான அவர், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். 

selvaraghavan

பிசியான இயக்குனராக இருந்து வந்த செல்வராகவன், சமீபகாலமாக நடிகராக உருமாறி, பீஸ்ட், சாணிக் காயிதம் ஆகிய படங்களில் சிறந்த நடிகராகவும் தன்னை நிலைநிறுத்தி வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மோகன் ஜி இயக்கத்தில் ‘பகாசூரன்’ படத்தில் அவர் நடித்துள்ளார். நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள இந்த படத்தில் சிறந்த நடிப்பை செல்வராகவன் பெற்றுள்ளார். 

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் பகிர்ந்துள்ள பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார். 


 

Share this story