இயக்குனர் செல்வராகவன் பிறந்தநாள் : வாழ்த்து கூறி போஸ்டர் வெளியிட்ட 'மெண்டல் மனதில்' படக்குழு..

இயக்குனர் செல்வராகவன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து கூறி 'மெண்டல் மனதில்' படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருப்பவர் ஜி.வி பிரகாஷ். இவர் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம் என்ன படத்தின் அவருடன் பணியாற்றி உள்ளார். இதனையடுத்து, இருவரும் மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, செல்வராகவன் இயக்கும் 'மெண்டல் மனதில்' எனும் புதிய திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் நடிக்கிறார்.இதில் மாதுரி ஜெயின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கும் ஜிவி பிரகாஷ், அவரது பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.
Special wishes to our directorial genius, @selvaraghavan.
— Parallel Universe Pictures (@ParallelUniPic) March 5, 2025
From @gvprakash and the entire team of #MentalManadhil ❤️ @gdinesh111 pic.twitter.com/YaPt70sboB
இந்நிலையில், செல்வராகவன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு 'ஹாப்பி பர்த்டே ஜெனிஸ்' என வாழ்த்து கூறி 'மெண்டல் மனதில்' படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.