இயக்குனர் மாரி செல்வராஜ் பிறந்தநாள்.. துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து

mari selvaraj

இயக்குனர் மாரி செல்வராஜ் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு . துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து
தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “திரைமொழியில் மனிதம் பேசும் மகத்தான இயக்குநர் ஒடுக்கப்பட்ட - விளிம்பு நிலை மக்களின் வலியையும் - அவர்களுக்கான அரசியலையும் தனது படைப்புகளின் மூலம் இடைவிடாது பேசி வரும் ஆகச்சிறந்த படைப்பாளி மாரி செல்வராஜுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பணிகள் மென்மேலும் சிறக்கட்டும் - கனவுகள் கைகூடட்டும். என் அன்பும், வாழ்த்தும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் துணை முதல்வர் உதயநிதி நடித்திருந்தார். இப்படம் தான் தனது சினிமா கரியரில் கடைசி படம் எனச் சொல்லி உதயநிதி சினிமாவை விட்டு விலகிவிட்டார். பின்பு மீண்டும் நடிக்க வந்தால் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிப்பேன் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story