பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் கூட்டணி அமைக்கும் சூர்யா…அப்டேட் கொடுத்த ரஜினி பட இயக்குனர்.

photos

முதன்முறையாக ஷங்கர்சூர்யா மெகா ஹிட் கூட்டணி, மெகாஹிட் பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photos

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்பொழுது இந்தியன் 2 மற்றும்  RC 15 ஆகிய படங்களை இயக்கி வருகிறார். அதே போன்று நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் 'வணங்கான்',  சிறுத்தை சிவா இயக்கத்தில் 'சூர்யா 42' படங்களில் நடித்து வருகிறார்.அடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல், தசெ ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photos

இந்நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் சூர்யா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை கிட்டத்தட்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது வேள்பாரி நாவலை படமாக எடுக்க ஷங்கர் முடிவு செய்துள்ளதாகவும், அது பெரிய பட்ஜெட்டில் தயாராக இருப்பதாகவும்  இதற்கான ஸ்கிரிப்ட் ரைட்டிங் வேலைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

photos

தற்சமயம் வரை கமிட்டாகியுள்ள படங்களை முடித்து விட்டு  அடுத்தபடியாக ஷங்கர் வேள்பாரி நவலைதான் படமாக இயக்க போகிறாராம். தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வான் போன்று மற்றுமொரு பிரம்மாண்டம் வர போவதால் ரசிகர்கள் ஆவலாக காத்துள்ளனர்.
 

Share this story