ஷாருக்காருடன் நடிக்கிறாரா விஜய்... அதுவும் பிரம்மாண்ட இயக்குனர் படத்திலா ?... இப்படியொரு கூட்டணியா என மிரளும் திரையுலகம் !

vijay with shahrukh khan

 ஷங்கர் இயக்கதில் ஷாருக்கானுடன் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தென்னிந்தியாவில் மிகப்பெரிய இயக்குனராக இருப்பவர் ஷங்கர். முன்னணி ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய் என பல நட்சத்திரங்களோடு பணியாற்றி ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். சினிமாவில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் முதன்மையானவர். 

vijay with shahrukh khan

தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தையும், கமலின் ‘இந்தியன் 2’ படத்தை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களை முடித்த பிறகு தனது கனவு படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  சுமார் 900 கோடியில் இந்த படம் உருவாகவுள்ளது. 

vijay with shahrukh khan

தண்ணீருக்கு அடியில் அறிவியல் கலந்த கதையாக உருவாகும் இப்படம் சர்வதேச அளவில் பேசப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு கதாநாயகர்கள் கொண்ட இந்த கதையில் ஷாருக்கான் மற்றும் விஜய் ஆகிய இருவரை வைத்து எடுக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளராம். இதற்காக இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கர் திட்டமிட்டபடி நடந்தால் இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கும் படமாக இப்படம் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

Share this story