‘இந்தியன் 3’ டிரைலர் பற்றி அதிரடி அப்டேட் கொடுத்த இயக்குனர் ஷங்கர்..!
2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ’இந்தியன் 2’ திரைப்படம் 5 வருடங்களாக படப்பிடிப்பு நடந்தது என்பதும் இடையில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் தற்போது ஒரு வழியாக படம் முடிவடைந்து வரும் ஜூலை மாதம் 12ம் தேதி வெளியிட திடமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ’இந்தியன் 2’ படத்துடன் ’இந்தியன் 3’ திரைப்படத்தையும் முடித்த ஷங்கர் இரண்டு படத்தின் டிரைலரை தயார் செய்து விட்டதாகவும் ’இந்தியன் 2’ வெளியாகும் திரையரங்குகளில் படம் முடிந்த பின்னர் ’இந்தியன் 3’ திரைப்படத்தின் டிரைலர் வெளியிடும் வகையில் ஏற்பாடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாகுபலி படத்தின் முதல் பாகம் முடிவடைந்த போதும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் முடிவடைந்த போதும் அடுத்த பாகத்தின் ஒரு சில காட்சிகள் மட்டும் காண்பிக்கப்பட்டது. ஆனால் ’இந்தியன் 2’ படத்தைப் பொறுத்தவரை ’இந்தியன் 3’ திரைப்படத்தின் முழு ட்ரெய்லரையும் காண்பிக்க ஷங்கர் முடிவு செய்திருப்பது வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Indian3 trailer will be played at the end of #Indian2 - @shankarshanmugh in the Kerala press meet.
— Rajasekar (@sekartweets) July 10, 2024
#Indian3 trailer will be played at the end of #Indian2 - @shankarshanmugh in the Kerala press meet.
— Rajasekar (@sekartweets) July 10, 2024