இந்தியன் 3 படத்தின் பணிகளை மீண்டும் தொடங்கிய இயக்குனர் ஷங்கர்..!

இந்தியன் 3 படத்தின் பணிகளை இயக்குனர் ஷங்கர் மீண்டும் தொடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் வெளிவந்த 'இந்தியன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு கடந்த ஆண்டில் இதே கூட்டணியில் 'இந்தியன் 2' வெளியானது. ஆனால், மிக மோசமான விமர்சனங்களைப் பெற்று வசூல் ரீதியாகவும் தோல்வி அடைந்தது. இதனால் 90 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த இந்தியன் 3 கிடப்பில் போடப்பட்டது. இருப்பினும் நேரடியாக ஓடிடியில் வெளியிட திட்டமிட்டனர். பிறகு தியேட்டரிலேயே வெளியிடலாம் என கூறி எஞ்சிய படப்பிடிப்பையும் முடிக்கலாம் என முடிவெடுத்தனர்.
அதேசமயம் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமா லைகாவிற்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியால் இப்படம் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு கைமாறியதாக தகவல் வந்தது. இதையடுத்து இந்தியன் 3 பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளார் ஷங்கர். இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில் விரைவில் கமல்ஹாசனை சந்தித்து அவரின் கால்ஷீட் தேதியை பெறவுள்ளார் என்கிறார்கள். திட்டமிட்டப்படி எல்லாம் சரியாக சென்றால் இந்தியன் 3 இந்தாண்டே வெளியாகலாம்.