'கங்குவா' என்பதற்கு இதுதான் அர்த்தமாம் - சிறுத்தை சிவாவின் மாஸ் தகவல்

'கங்குவா' என்ற தலைப்பிற்கு என்ன பொருள் என்பதை இயக்குனர் சிறுத்தை சிவா தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் ‘கங்குவா’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் வெற்றியை பொறுத்து இரண்டாவது பாகமும் உருவாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க 3டி தொழிற்நுட்பத்தில் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் சூர்யா 10-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஏராளமான அனிமேஷன் காட்சிகள் இடம்பெற உள்ளது. இந்த படம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கற்பனை கலந்த கதைக்களம் கொண்ட படமாகும்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சூர்யா பிறந்தநாளையொட்டி இன்று நள்ளிரவு 12 மணிக்கு 'கங்குவா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கங்குவா படத்தின் தலைப்பு என்ன பொருள் என்பதை இயக்குனர் சிறுத்தை சிவா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், 'கங்குவா' என்றால் நெருப்பு மகன் என்று அர்த்தம். இது Ganguva அல்ல. Kanguva என்று தமிழில் உச்சரிக்கவேண்டும். கங்குவா என்றால் நெருப்பு என்று அர்த்தம் என்றார்.
மேலும் பேசிய அவர் படப்பிடிப்பிற்காக ஒரு சில இடங்களை அடைய மலையேற்றம் போல் நீண்ட தூரம் நடந்து செல்லவேண்டும். அது எங்களுக்கு கடினமாக தோன்றவில்லை. ஏனென்றால் அந்த நாளின் முடிவில் எடுக்கப்பட்ட காட்சிகளை பார்த்தபோது அது மிகவும் சுவாரசியமாக இருந்தது. இந்த படத்திற்காக நடிகர் சூர்யா நூறு சதவீதம் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார் என்று கூறினார்.
Director Siva at #Kanguvaglimpse screening:
— AmuthaBharathi (@CinemaWithAB) July 22, 2023
'GANGUVA' - ❌
'KANGUVA' - ✅
Son of Fire 🔥🔥pic.twitter.com/mmnGT1ZEKR
Director Siva at #Kanguvaglimpse screening:
— AmuthaBharathi (@CinemaWithAB) July 22, 2023
'GANGUVA' - ❌
'KANGUVA' - ✅
Son of Fire 🔥🔥pic.twitter.com/mmnGT1ZEKR