எப்போது தொடங்குகிறது எஸ்.ஜே.சூர்யாவின் 'கில்லர்' - புதிய அப்டேட் !

sj surya

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கவிருக்கும் 'கில்லர்' படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு முக்கிய பங்கு உண்டு. கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான அஜித்தின் ‘வாலி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த அவர், விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘குஷி’ இயக்கினார். 

sj surya

இதையடுத்து நியூ, அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட படங்களை இயக்கி நடித்தார். ஆனால் இந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை வெறவில்லை. இயக்குனராக சோபிக்கவில்லை என்றாலும் நடிகராக களமிறங்கி தற்போது கலக்கி வருகிறார். வில்லன் மற்றும் ஹீரோ  என ஒரேநேரத்தில் இரு கதாபாத்திரத்திலும் கலக்கி வருகிறார். தற்போது ‘மார்க் ஆண்டனி’, ‘ஜிகர்தாண்டா 2’, ஆர்சி 15 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.  

இந்நிலையில் நீண்ட நாள் கழித்து மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ளார். அதனால் நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள ‘கில்லர்’ படத்தை இயக்கவுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்கவிருந்தது. ஆனால் வேறு இயக்குனர்களில் படங்களில் தற்போது பிசியாக எஸ்ஜே சூர்யா நடித்து வருவதால் வரும் ஆகஸ்டில் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Share this story