இயக்குனர் சுதா கொங்கராவுக்கு விபத்து... இந்தி படத்தின் படப்பிடிப்பு நிறுத்தம் ?

sudha kongara

இயக்குனர் சுதா கொங்கராவிற்கு கை உடைந்ததால் சினிமாவிற்கு ஒரு மாதம் பிரேக் எடுப்பதாக அறிவித்துள்ளார்‌. 

மணிரத்னத்திடன் உதவி இயக்குனராக பணியாற்றிய சுதா கொங்கரா, 'துரோகி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதன்பிறகு மாதவனை வைத்தே 'இறுதிச்சுற்று' படத்தை இயக்கினார்‌. இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்ததை அடுத்து 'குரு' என்ற பெயரிலும் தெலுங்கிலும் இயக்குனர். 

sudha kongara

அதன்பிறகு சூர்யாவை வைத்து 'சூரரைப்போற்று' படத்தை இயக்கினார். கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டடித்ததை அடுத்து தற்போது இந்தியில் ரீமேக்காகி வருகிறது. பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் சூர்யாவும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

sudha kongara

இந்நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா திடீரென விபத்து ஒன்றில் சிக்கினார். இந்த விபத்தில் சுதா கொங்கராவிற்கு கை உடைந்து கட்டு போட்டிருக்கிறார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நன்கு வலிக்கிறது. எரிச்சலூட்டுகிறது. இன்னும் ஒரு மாதம் பிரேக் என்று சோகமாக தெரிவித்துள்ளார். இதனால் 'சூரரைப்போற்று' படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


 

Share this story