இயக்குனர் சுதா கொங்கராவின் Fan Girl மொமண்ட்...!
1741423851000

இயக்குனர் சுதா கொங்கரா, பிரபு தேவாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனராக முக்கிய இடம் பிடித்துள்ள சுதா கொங்கரா, சூரரைப் போற்று மற்றும் இறுதிச்சுற்று போன்ற படங்களை இயக்கி பெரும் புகழைப் பெற்றுள்ளார். இயக்குனர் துறையில் பல பெண்கள் பணியாற்றி வந்தாலும், சுதா கொங்கரா தமிழ் சினிமாவில் தனக்கான முக்கிய இடத்தை பிடித்துவைத்துள்ளார். தற்போது, இவர் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோருடன் "பராசக்தி" என்ற படத்தை இயக்கி வருகிறார்.
Fangirl moment at the airport!!! pic.twitter.com/JJEnpqsX6O
— Sudha Kongara (@Sudha_Kongara) March 7, 2025
இந்நிலையில், நடிகரும், நடன இயக்குநருமான பிரபு தேவாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ள இயக்குனர் சுதா கொங்கரா, விமான நிலையத்தில் தனது Fan Girl மொமண்ட் என குறிப்பிட்டுள்ளார்.