பிரபல இயக்குனர் வீட்டில் விருந்து... வெளுத்து வாங்கிய நடிகர் மாதவன் !

Madhavan

பிரபல இயக்குனர் சுதா கொங்கரா, நடிகர் மாதவனுக்கு விருந்து வைத்து அசத்தியுள்ளார். 

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் நடிகராக இருப்பவர் மாதவன். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள அவர், சமீபத்தில் இயக்குனராக மாறி ‘ராக்கெட்ரி’ படத்தை இயக்கி நடித்தார். தற்போது நயன்தாராவுடன் இணைந்து ‘டெஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாறு படத்திலும் நடிக்கவுள்ளார். 

Madhavan

இதற்கிடையே கடந்த 2016-ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடித்திருந்தார். குத்துச்சண்டையை மையமாக உருவான இப்படத்தில் பயிற்சியாளராக மாதவன் நடித்திருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படத்தில் மாதவனுடன் இணைந்து ரித்திகா நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றது. 

Madhavan

இந்நிலையில் நடிகர் மாதவனை தனது வீட்டிற்கு அழைத்த இயக்குனர் சுதா கொங்கரா, தடபுடல் விருந்து வைத்து அசத்தியுள்ளார். இதை ரசித்து ருசித்து மாதவன் சாப்பிடும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த விருந்தில் வான்காய் அண்ணம், வாடியலு, பொடி, சாம்பார், வத்த குழம்பு, தயிர் சாதம் உள்ளிட்ட அறுசுவை உணவை கொடுத்து அவர் அசத்தியுள்ளார். 

  

Share this story