பழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்து இயக்குனர் சுந்தர் சி குடும்பத்தினருடன் சாமி தரிசனம்...!

sundar c

பழனி முருகன் கோவிலில்  இயக்குனர் சுந்தர் சி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார் 


இயக்குனர் சுந்தர்.சி கடைசியாக 'அரண்மனை 4' திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனையடுத்து சுந்தர் சி இயக்கத்தில் உருவ=வான 'மதகதராஜா' படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் வெளியானது. அதைத்தொடர்ந்து தற்போது நயன்தாராவை வைத்து  'மூக்குத்தி அம்மன் 2' படத்தினை இயக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. sundar c

இந்நிலையில், தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திர தம்பதிகளான இயக்குனர் சுந்தரி சி- நடிகை குஷ்பூ தம்பதி இன்று 25ஆம் ஆண்டு திருமண நாள் கொண்டாடுகின்றனர். அதையொட்டி, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சுந்தர் சி மற்றும் அவரது மனைவி நடிகை குஷ்பூ தனது மகள் மற்றும் உறவினர்களுடன் சாமி தரிசனம் செய்தார். 



அப்போது, முருகனுக்கு நடிகர் சுந்தர் சி முடிகாணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கி மரியாதை செய்யப்பட்டன. பின்னர் சுந்தர் சி சார்பில் இன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நன்கொடை வழங்கப்பட்டது.

 

 

Share this story