மாயி பட இயக்குநர் சூர்யபிரகாஷ் காலமானார்
1716826116262
திரைப்பட இயக்குநர் சூர்யபிரகாஷ் (55) சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார்.
கடந்த 1999 ஆம் ஆண்டு நடிகர் ராஜ்கிரண் மற்றும் நடிகை வனிதா விஜயகுமார் ஆகியோர் நடித்த மாணிக்கம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குநர் சூர்யபிரகாஷ், இதனையடுத்து, சரத்குமாரின் மாயி, திவான், ராஜ்கிரணின் மாணிக்கம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அவரது சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு உடல் எடுத்துச் செல்லப்படுகிறது. திரையுலகினர் பலர் அவருக்கு அஞசலி செலுத்திவருகின்றனர்.
இறுதியாக சூர்யபிரகாஷ் இயக்கிய வருசநாடு என்ற திரைப்படம் இன்னும் வெளியாகாத சூழலில் இன்று அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.