‘அதெல்லாம் ஏமாற்று வேலை’ - இயக்குனர் தங்கர் பச்சான் காட்டம் !

Thangar Bachan

 கதையில்லாமல் 2-ஆம் பாகம் எடுப்பது ஏமாற்று வேலை என்று இயக்குனர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக இருப்பவர் தங்கர் பச்சான். தமிழில் ‘அழகி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், பள்ளிக்கூடம், சொல்ல மறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது கருமேகங்கள் கலைகின்றன என்ற படத்தை நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

Thangar Bachan

இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியின்போது அழகி படத்தின் இரண்டம் பாகம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 2, 3-ஆம் பாகம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை. கதை கிடைக்காத நிலையில் 2-ஆம் பாகம் என்று சொல்கின்றனர். என்னால் அதை செய்யமுடியாது என்று தெரிவித்தார். 

பெரிய பட்ஜெட் படங்கள் எடுப்பது தேவையில்லை. கதைதான் முக்கியம். கதை இல்லாமல் அதிக செலவில் புதிய தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட படங்கள் எடுப்பதில் எந்த பலனும் இல்லை. கதை இருந்தால்தான் ரசிகர்களுக்கும், சினிமாவிற்கும் ஒரு இணைப்பு இருக்கும். கதை எழுத முன்பெல்லாம் நிறைய பேர் இருந்தனர். தற்போது சினிமாவில் கதை எழுத ஆள் இல்லை என்று கூறினார். 

 

Share this story