அரசியல் படமாக உருவாகிறதா ‘தளபதி 68’ ? - இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்த அதிரடி விளக்கம் !

thalapathy 68

விஜய்யின் 68வது படம் அரசியல் படமாக உருவாகிறதா என்பதற்கு இயக்குனர் வெங்கட் பிரபு விளக்கமளித்துள்ளார். 

 ‘லியோ’ படத்தை முழுவதும் முடித்துள்ள நடிகர் விஜய், அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.  ‘தளபதி 68’ என்று தற்காலிகமாக அழைக்கப்படும் அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. 

thalapathy 68

இந்த படத்தில் சர்வதேச கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.  முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. 

இந்நிலையில் ‘தளபதி 68’ படம் குறித்து புதிய அப்டேட் இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். அதில் ‘தளபதி 68’ படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ‘லியோ’ படத்தின் ரிலீசுக்கு பிறகுதான் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும். இந்த படம் அரசியல் படமல்ல. மாறாக என்னுடைய வழக்கமான என்டர்டெயினர் படமாக இருக்கும். 

இந்த படத்தில் கமிட்டான பிறகு முதலில் அஜித் தான் வாழ்த்து தெரிவித்தார். உங்கள் பட டைட்டிலில் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் என போடுவீர்களா என்ற கேள்விக்கு, நான் தளபதி என்று தான் போடுவேன் என்று கூறினார். 

 

 

Share this story