இரு முன்னணி நடிகர்களை இயக்கும் வெற்றிமாறன்... வேற லெவலில் உருவாகும் பான் இந்தியா திரைப்படம் !

vetrimaran

தென்னிந்தியாவின் இரண்டு முன்னணி நடிகர்களை வைத்து புதிய பான் இந்தியா திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சூப்பர் ஹிட் திரைப்படங்கள் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். ‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய தரமான படங்களை கொடுத்துள்ளார். தற்போது விஜய் சேதுபதி மற்றும் சூரியை வைத்து ‘விடுதலை’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

vetrimaran

இந்த படத்தையடுத்து சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்நிலையில் ‘வாடிவாசல்’ படத்திற்கு இரண்டு கதாநாயகர்களை கொண்டு புதிய படம் ஒன்றை வெற்றிமாறன் இயக்கவுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ளது. 

vetrimaran

இரு பாகங்களாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தில் தனுஷ் மற்றும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரும் நடிக்கவுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் இந்த படத்திற்கான படப்பிடிப்பை தொடங்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார். பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

 

Share this story