பிரபல இயக்குனருக்கு இப்படியொரு ஆசையா ?.. வைரலாகும் வீடியோ !
பிரபல இயக்குனர் வெற்றிமாறன் புதிய பைக் ஒன்று வாங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான இயக்குனர்களில் வெற்றிமாறனும் ஒருவராக இருக்கிறார். பிரபல இயக்குனர் பாலு மகேந்திராவின் உதவி இயக்குனராக இருந்த இவர், தனது சிறந்த திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரின் படங்களில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் சமூகத்தில் பேசும் பொருளாக மாறிவிடுகிறது.

தனுஷின் நடிப்பில் வெளியான 'பொல்லாதவன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய நான்கு படங்களும் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. இதையடுத்து நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் 'விடுதலை' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன், புதிய பி.எம்.டபுள்யூ பைக் ஒன்றை வாங்கியுள்ளார். ஷோரூம் ஒன்றில் வாங்கியுள்ள அந்த பைக்கை பார்வையிடும் வெற்றிமாறன் மகிழ்ச்சியடையும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
@Vetrimaaran Sir New Bike !!?????@dhanushkraja ?#NaaneVaruven#Maaran#Vaathi pic.twitter.com/15SzRklFhS
— Nandhu Dfc !!?? (@NandhuDfc) February 13, 2022

