தெலுங்கு நடிகருடன் கூட்டணி அமைக்கும் வெற்றிமாறன்... எகிற வைக்கும் எதிர்பார்ப்பு !

junior ntr

தெலுங்கு நடிகர் ஒருவரை விரைவில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தென்னிந்திய சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். தனுஷின் நடிப்பில் வெளியான 'பொல்லாதவன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய நான்கு படங்களும் சூப்பர் ஹிட் அடித்துள்ளன.

junior ntr

இதையடுத்து நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் 'விடுதலை' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இரு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் வெளியாக உள்ளது. இதையடுத்து சூர்யாவின் 'வாடிவாசல்' படத்தை இயக்குவார் தகவல் வெளியானது. 

junior ntr

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆரை சந்தித்து வெற்றிமாறன் கதை ஒன்றை கூறியிருக்கிறார். இந்த கதை அவருக்கு பிடித்துவிட்டதால் உடனே ஓகே சொல்லி உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதனால் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பது உறுதியாகியுள்ளது.‌

Share this story