அஜித்திற்கு பதில் ‘லவ் டுடே’ ஹீரோ... வேகமாக களமிறங்கும் விக்னேஷ் சிவன் !

vignesh shivan

அஜித்தை வைத்து இயக்கவிருந்த கதையில் புதிய ஹீரோவை வைத்து இயக்குனர் விக்னேஷ் படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன். ‘போடா போடி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், நானும் ரெளடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.‌ இந்த படங்களுக்கு அஜித் 62-வது படத்தை இயக்கவிருந்தார். ஆனால் கதையில் ஏற்பட்ட பிரச்சனையால் படத்திலிருந்து வெளியேறிவிட்டார். 

vignesh shivan

அஜித் கைவிட்டதால் மன உளைச்சலில் இருந்த விக்னேஷ் சிவன், அதே கதையில் புதிய ஹீரோவை வைத்து திரைப்படம் இயக்கவுள்ளாராம். அந்த படத்தில் அஜித் கதாபாத்திரத்தில் 'லவ் டுடே' இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

டபுள் ஹீரோ படமாக இருக்கும் இந்த படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. அஜித்தின் 62 வது படத்திற்கு முன்னரே இந்த படத்தை முடித்து வெளியிட விக்னேஷ் சிவன் திட்டமுட்டுள்ளாராம். விக்னேஷ் சிவனின் வழக்கமான ஸ்டைலில் இந்த படம் உருவாகும் என தெரிகிறது. இதற்கிடையே சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'லவ் டுடே'. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தால் விக்னேஷ் சிவன், அவரை ஒப்பந்தம் செய்யதிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story