அஜித் கதையில் டாப் ஹீரோ .... விக்னேஷ் சிவனின் புதிய பிளான் !

vignesh shivan

அஜித்தை வைத்து எடுக்கவிருந்த படத்தை வேறொரு நடிகரை வைத்து எடுக்க இயக்குனர் விக்னேஷ் சிவன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன். சிம்புவின் நடிப்பில் வெளியான 'போடா போடி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த 'நானும் ரெளடிதான்' படத்தை இயக்கிய பிரபலமானார். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்', விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்றது. 

vignesh shivan

இந்த படத்தை அடுத்து அஜித்தை வைத்து படம் இயக்கவிருந்தார். லைக்கா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவிருந்த அந்த படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த சில மாதங்கள் முதற்கட்ட பணிகள் நடைபெற்ற நிலையில் கதையில் திருப்தியில்லை என கூறி வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

vignesh shivan

இந்நிலையில் அஜித்தை வைத்து எடுக்கவிருந்த கதையை வேறு ஒரு ஹீரோ வைத்து எடுக்க விக்னேஷ் சிவன் திட்டமிட்டுள்ளார். இதற்காக நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் புதிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.  ‌

 

Share this story