குடும்பஸ்தன் படத்தை பாராட்டிய இயக்குனர் விக்னேஷ் சிவன்..!

இயக்குனர் விக்னேஷ் சிவன் குடும்பஸ்தன் படத்தை பாராட்டியுள்ளார்.
ஜெய் பீம், குட் நைட், லவ்வர் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் மணிகண்டன். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி 24ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் குடும்பஸ்தன். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கி இருந்தார். சினிமாக்காரன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க வைஷாக் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து குரு சோமசுந்தரம், சான்வி மேக்னா மற்றும் பலர் நடித்திருந்தனர். காமெடி கலந்த கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றிப் பாதையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் பாராட்டியுள்ளார்.
குடும்பஸ்தன் படம் முழுவதும் பிடித்திருந்தது. மணிகண்டன் அருமையாக நடித்திருக்கிறார். படத்தின் திரைக்கதையை எழுதிய விதம், ஒவ்வொரு நடிகரும் படத்தை படமாக்கிய விதம், எடிட் செய்த விதம், இசை ஆகிய அனைத்தும் கைத்தட்டலுக்கு தகுதியானது. திரையரங்குகளில் இந்த படத்தை பார்த்து மிகவும் ரசித்தேன். டைனிங் டேபிள் மற்றும் வயிற்றில் இருக்கும் குழந்தையுடன் பேசும் சிங்கிள் ஷாட் நடிப்பு பிரமாதம். மணிகண்டன் நீங்கள் பல விருதுகளை வெல்வதற்கு தகுதியானவர்” என்று குடும்பஸ்தன் படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார் விக்னேஷ் சிவன்.