இயக்குனர் விக்னேஷ் சிவன் ட்விட்டர் திடீர் ஹேக்... கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் !

vignesh shivan

இயக்குனர் விக்னேஷ் சிவனின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சமூக வலைத்தளங்களை ஹேக் செய்யப்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது. குறிப்பாக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு மர்ம நபர்கள் தங்களது சித்து விளையாட்டை காட்டுகின்றனர். ஹேக் செய்யப்பட்ட கணக்குகள் மூலம் பணம் பறித்தல் மற்றும் அவதூறான பதிவுகளை பதிவிடுகின்றனர். 

vignesh shivan

இந்நிலையில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனின் ட்விட்டர் கணக்கு திடீரென ஹேக் செய்யப்பட்டுள்ளது. தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை இயக்குனர் விக்னேஷ் சிவன் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள இன்டா பதிவில், யாரோ என்னுடைய ட்விட்டர் கணக்கை முடக்கியுள்ளனர். அதனால் என் பெயரில் வரும் ட்விட்டர் பதிவுகளை பொருட்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

vignesh shivan vignesh shivan

பிரபல நடிகை நயன்தாராவின் கணவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன். நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர்கள் கடந்த ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இயக்குனர் விக்னேஷ் சிவன், சிம்பு நடிப்பில் வெளியான ‘போடாபோடி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதன்பிறகு ‘நானும் ரௌடிதான்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அடுத்து புதிய படம் ஒன்றை இயக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story